idhu oor udhayam, ithu oru udhayam novel, rc novel @tamilbookstore.in

Ithu Oru Udhayam RC Tamil Novel

  • Post author:
  • Post comments:0 Comments

‘Ithu Oru Udhayam’ means this is a rise. The author of this novel is Ramanichandran. She is a renowned author who has published 170 novels with 50 years of literary experience.

Ithu Oru Udhayam Novel

‘Ithu Oor Uthayam’ is one of the good family based romance novels. RC has a separate fan-base of women who only likes to read family novels. We have uploaded many eBook links of ‘Ramanichandran novels’ on our website here.

Ithu Oor Uthayam book is in eBook version link is available on below. If you want to read any books or novels in Tamil literature just mention the name in the comment box below.

Name of Book :Idhu Oor Uthayam
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Drama / Fiction
Pages                      :195 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :4.1
Novel Details

Novel Description

அந்தச் சோம்பேறி, வருகிறபோது வரட்டும்மா. இப்போது நாளைக்கு நடக்கப் போகிற செல்வலட்சுமியின் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று சாமியை வேண்டிக் கொண்டு, மளமளவென்று திருமண வேலைகளைக் கவனியுங்கள். முதலில் வைர மாலைக்காக அப்பாவுக்கு போன்

பண்ணுங்கள். இல்லாவிட்டால், மண்டபத்தில் வைத்து, அப்பாவிடம் வாங்கிக் கட்ட நேரிடும்!” என்று மிரட்டி, ஒரு விதமாகத் தாயின் மனதை மாற்றியவள், மறுபடியும் அது பழைய பாதைக்குப் போய் விடாமல், தங்கை திருமணத்திலேயே நிலைத்திருக்குமாறும், கவனித்துக் கொண்டாள்.

அவளைப் பொறுத்தவரை, அது கடினமாகவும் இருக்க வில்லை . ஏனெனில், குமுதவல்லியின் முதல் வேலை, கணவர் முத்து மாணிக்கத்திடம் பேசுவதாயிற்றே!

எப்போதுமே கணவரிடம் எதையும் கேட்பது என் றாலே, குமுதத்துக்கு மற்றது எல்லாம் மறந்து, பின்னே போய்விடும்! அவர் கொஞ்சம் முன்னால் போனால் கடித்து, பின்னால் சென்றால் உதைக்கிற ரகம்! அவரிடம் ஒன்றைச் செய்யச் சொல்லிக் கேட்பது, மிகவும் கடினம்.

மறந்திருப்பாரோ என்று நினைவூட்டினால், எனக்குத் தெரி யாதா, சொல்ல வேண்டுமா என்று எரிச்சல் படுவார். அதற் காகச் சொல்லாமல் விட்டாலோ, ஆயிரம் வேலை பார்த்துக் கோடி கோடியாகச் சம்பாதிக்கிற மனிதன், இதையெல் லாமா நினைவு வைத்திருப்பான்? நினைவுபடுத்தித் தொலைப்பதற்கென்ன என்று கத்துவார்.

அப்படிப்பட்டவரிடம், இப்போது இப்படிச் சொன் னால் பரவாயில்லையா? அல்லது பிறகு வேறு மாதிரிச் சொன்னால் பிரச்சினை குறைவாக இருக்குமா என்று, யோசித்து, யோசித்து அவளது முழுக் கவனமும் அந்த யோசனையிலேயே போய் விடும்.

இரண்டில், முன்னது மேல் என்று, மனைவி இப்போது தீர்மானித்தாள். என்ன திட்டு என்றாலும் டெலிபோன் பில் ஏறுமே என்று சீக்கிரமாக முடித்து விடுவார் என்பது,

ஒன்று. அடுத்தது, எதிர்க்க முடியாமல், அடங்கிப் போகிற ஆளை எதிரே நிறுத்தி வைத்துத் திட்டத்தான் முத்து மாணிக்கத்துக்கு ரொம்பப் பிடிக்கும். அது, சில சமயங் களில் மணிக்கணக்கில் கூட நீளும்.

அத்தோடு, இரும்புப் பெட்டியில் இருந்த நகை வேறு, இப்போது கட்டாயமாகத் தேவைப்படவும் செய்தது.

அவளாக எடுத்துப் போகலாம் என்றால், இரும்புப் பெட்டியைத் திறக்கும் விதத்தைக் கட்டின மனைவியான அவளை மட்டுமின்றிப் பெற்ற மகள்களையும் கூட நம்பி, முத்துமாணிக்கம் கற்றுக் கொடுத்தது கிடையாது.

மகள்கள், என்றேனும் ஒருநாள் அடுத்த வீட்டுக்குப் போகிறவர்கள். என்றேனும் ஒரு நாள், இரும்புப் பெட் டியை வழித்துத் துடைத்து எடுத்துக் கொண்டு, புருஷன் வீட்டுக்குக் கொண்டு போய் விடுவார்களாம். பெற்ற மகள்களிடம், அவருக்கு, அவ்வளவு நம்பிக்கை! அதனால், அவர்களிடம் அந்த ரகசியத்தைச் சொன்னதில்லை !

End Notes

We hope you will read the novel ‘Idhu Oor Uthayam’ to know ramanichandran’s style. If you want to share any review about this novel just leave a comment below.

Leave a Reply