lavanya novel, lavanya rc novel, lavanya ramanichandran novel @tamilbookstore.in

Lavanya Ramanichandran Romantic Novel

  • Post author:
  • Post comments:0 Comments

Ramanichandran also named the novel after the protagonist of the novel Lavanya. The novel was published by Arunodayam Publishing in 2003. The story of the novel is about the lovers becoming husband and wife.

Lavanya Novel by RC

Name of Book :லாவண்யா
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Fiction / Tamil Novel
Pages                      :211 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :3.8
Book Details

Summary

“நானாக ஒரு போதும்‌ இங்கிருந்து போகவே மாட்டேன்‌!” என்று சமையல்காரம்மாவிடம்‌:
உறுதி கூறிய போது சந்தனா முழுமனதோடு, தன்‌ வார்த்தைகளை நம்பித்தான்‌ சொன்னாள்‌! ஆனால்‌, அங்கே இருக்கப்‌ பிடிக்காமல்‌, மனம்‌ வெறுத்து, அந்த வீட்டை விட்டுத்‌ தானாகவே
ஒரு நாள்‌ வெளியேறுவாள்‌ என்று அப்போது அவளுக்குத்‌ தெரியாது!

அன்று சந்தனா வீடு திரும்பக்‌ கிளம்பிய நேரம்‌, வழக்கம்‌ போலத்தான்‌… ஆனால்‌, வெகு அதிசயமாக வரும்‌ வழியில்‌ போக்குவரத்து நெரிசல்‌ மிகவும்‌ குறைவாக. ‘இருக்கவே, எப்போதும்‌ வரும்‌ நேரத்துக்குக்‌ கிட்டத்தட்ட அரை மணி நேரம்‌ முன்னதாகவே. சந்தனா வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டாள்‌.

ஆனால்‌, அதிலும்‌ ஒரு சிறு பிரச்சினையாக, கேட்டைத்‌ திறந்து விடுவதற்கு, வாயில்‌ காவலன்‌.
கேட்‌ அருகே இல்லை! பெரிய கேட்‌, சின்ன கேட்‌ இரண்டின்‌ அருகிலும்‌ இல்லாமல்‌, பின்புறமாக அவன்‌ ஏதோ தோட்ட வேலை செய்து கொண்டிருந்தான்‌!

பொதுவாக ராசையா வேலையில்‌ அலட்சியம்‌ காட்டுகிறவன்‌ இல்லை! ஆனால்‌ தோட்டக்காரனுக்கு உதவியாக கொத்திக்‌ கிளறி, முரட்டு வேலை ஏதாவது செய்து கொடுப்பான்‌!

அன்றும்‌ அது போலச்‌ செய்து கொண்டிருந்த போதுதான்‌, சந்தனா திரும்பி வந்தது! ஆனால்‌, கேட்‌ திறந்து விட அவன்‌ இல்லாததையும்‌ அவளுக்குப்‌ பிரச்சினை என்று
சொல்லிவிட முடியாது!

அப்படி வாயில்‌ கதவருகில்‌ யாரும்‌ இல்லாதபோது, தடையின்றி உள்ளே வருவதற்கு, அந்த.
வீட்டு மனிதர்கள்‌ அறிந்த ரகசியம்‌ ஒன்று உண்டு! சின்ன கேட்டின்‌ உட்புறமாகக்‌ கையை நன்றாக நீட்டிப்‌ பக்கவாட்டுச்‌ சுவரில்‌, சற்றுத்‌ தள்ளிப்‌ பதித்திருந்த தாளைத்‌ திறந்து கொண்டு, உள்ளே செல்வார்கள்‌.

கேட்‌ தாண்டி, நாலு எட்டுதான்‌ உள்ளே வைத்திருப்பாள்‌! அதற்குள்‌, “இவ்வளவு தூரம்‌ தாண்டி, இங்கேயுமா இந்தத்‌ தொல்லை? மரியாதையாக, வந்த வழியே திரும்பிச்‌ செல்‌! அல்லது. உன்‌ கழுத்தைப்‌ பிடித்து வெளியே தள்ளுவேன்‌!” என்று அதட்டியது. ஓர்‌ ஆண்‌ குரல்‌!

eBook Link

Some of the famous novels of writer RC Novels,
End Notes

We hope you will read the novel ‘Lavanya‘ to get new experience. If you want to share any review about book just comment below.

Leave a Reply