ini varum udhayam novel, ini varum udhayam, rc novels @tamilbookstore.in

Ini Varum Udhayam Novel by Ramanichandran

  • Post author:
  • Post comments:0 Comments

Ramani Chandran alias Ramani is the author of the novel ‘Ini Varum Udhayam’. Ramani is a great Tamil writer, who sounded through writing as the social voice for women. Through the story of the novel, she conveyed many ideas about education, employment, freedom and rights for women.

Ini Varum Udhayam RC Novel

Name of Book :Inivarum Uthayam
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Fiction / Tamil Novel
Pages                      :97 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :4.2
Book Details

காற்றில்‌ ஆடும்‌ சருகைப்போல, அவளது உடம்பு தூக்கிப்‌ போடுகையில்‌, “நீ முதலில்‌
உட்காரம்மா!” என்று சோஃபாவில்‌ கிடந்த துணிகளை ஒதுக்கி, யாரோ அவளது தோளைப்‌
பற்றி உட்கார வைத்தார்கள்‌!

அப்பாடி என்று கண்‌ மூடித்‌ தலை சாய்த்து அமர்ந்தாள்‌ சந்தனா.

“ஐயையோ, எதையும்‌ தொடக்‌…” என்று பதறிய எதிர்‌ வீட்டு அம்மாளின்‌ பேச்சில்‌:
குறுக்கிட்டு, “அவளுக்கு அதிர்ச்சி! உடம்பு நடுங்குவதைப்‌ பாருங்கள்‌! உடனே, குடிப்பதற்கு
ஏதாவது சூடாகக்‌ கொடுக்க வேண்டும்‌! நிறையச்‌ சர்க்கரை போட்டு, டீ… இங்கே சமையல்‌
அறை எங்கே இருக்கிறது?” என்று கேட்டபடி, சந்தனாவின்‌ சில்லிட்டிருந்த கையைப்‌ பற்றி,
வேகமாகச்‌ சூடு வரத்‌ தேய்த்து விட்டாள்‌, அவளை உட்கார வைத்த பெண்மணி.

“நான்‌ கூடப்‌ பார்த்திருக்கிறேன்‌ அம்மா! இனிப்பாக டீ குடித்தால்‌, அதிர்ச்சி குறைந்து, தெம்பு
வரும்‌ என்று, வகுப்பில்‌ முதல்‌ உதவியில்‌ சொல்லிக்‌ கொடுத்தார்கள்‌! ஆன்ட்டி இங்கே கிச்சன்‌.
அது!” என்று காட்டினான்‌ சுதாகர்‌, எதிர்‌ வீட்டுப்‌ பையன்‌!

“ஏய்‌, பொறுடா! ஏதேனும்‌ பெரிய பொருள்‌ போயிருந்தால்‌, ரேகையைக்‌ கெடுத்து விட்டீர்கள்‌.
என்று போலீஸ்‌ தகராறு பண்ணுவார்கள்‌! கனகம்‌, நீ போய்‌ நம்‌ வீட்டில்‌ டீ போட்டு எடுத்து
ஈ!” என்று மனைவியை அனுப்பினார்‌ எதிர்‌ வீட்டுக்காரர்‌. “அங்கே பேத்தியைக்‌ கொஞ்ச
உட்கார்ந்து விடாமல்‌, சீக்கிரமாக வா! சுதா, நீயும்‌ கூடப்‌ போய்‌, அம்மாவை விரட்டிச்‌ சீக்கிரம்‌.
கொண்டு வரச்‌ சொல்லு!” என்று மனைவியையும்‌, பின்னோடு மகனையும்‌ அனுப்பி வைத்தார்‌.

அதன்‌ பிறகே, சந்தனாவின்‌ அருகில்‌ அமர்ந்து, அவளது கைகளைச்‌ சூடு வரத்‌ தேய்த்து,
விட்டுக்‌ கொண்டிருந்த பெண்மணியைச்‌ சரிவரக்‌ கவனித்து, “நீங்கள்‌ யார்‌ என்று:
தெரியவில்லையே! இந்த வீட்டில்‌, இதற்கு முன்னால்‌, உங்களைப்‌ பார்த்ததாக…” என்று
இழுத்தார்‌ அவர்‌!

“பார்த்திருக்க மாட்டீர்கள்‌!” என்றாள்‌ அந்த அம்மாள்‌. “இப்போதுதான்‌, முதல்‌ தடவையாக.
வருகிறேன்‌! நன்றி சொல்ல வந்தால்‌, பாவம்‌, பலன்‌ கருதாமல்‌ எனக்கு உதவி செய்த இந்த நல்ல பெண்ணுக்கு இப்படியொரு பிரச்சினை!” என்றாள்‌ வருத்தத்துடன்‌!

உட்கார்ந்ததிலும்‌, தொடர்ந்து, அந்த அம்மாள்‌ கைகளைத்‌ தேய்த்து விட்டதிலுமாக, ஓரளவு
சுரனை வந்திருக்கவே. சந்தனாவும்‌, தலை திருப்பி, அந்தப்‌ பெண்மணியைப்‌ பார்த்தாள்‌…

என்ன உதவி? யார்‌ இந்த அம்மாள்‌?

‘சந்தனாவின்‌ கண்களில்‌ கேள்வியைக்‌ காணவும்‌, லேசாக முறுவலித்து, “நான்‌ தானம்மா, நீ
கண்டெடுத்துக்‌ கொடுத்த பர்சின்‌ சொந்தக்காரி! அதில்‌ இருந்த பணம்‌ ஒன்றுமில்லா விட்டாலும்‌, அந்தப்‌ படங்கள்‌, எனக்கு விலை மதிப்பற்றவை!!… அதற்காக நன்றி செலுத்த வந்தேன்‌! என்‌ பெயர்‌ தான்‌. கார்டில்‌ பார்த்திருப்பாயே, மீனாட்சி!” என்றாள்‌ பெரியவள்‌.

பேச்சின்‌ நடுவில்‌ மீனாட்சி அம்மாளின்‌ முகத்தில்‌ இருள்‌ படிந்து விலகினாற்‌ போல

Conclusion

The novel ‘Inivarum Uthayam’ is a 97 page love story. This is a romantic Tamil novel. If you like this book just leave a review below.

Leave a Reply