ennai yaar endru enni novel, ennai yaar endru enni book @tamilbookstore.in

Ennai Yaar Endru Enni Ramanichandran Novel Free Download

  • Post author:
  • Post comments:0 Comments

‘Ennai Yaar Endru Enni’ is a Tamil romance genre novel which is written by ramanichandran. You can get your free kindle version on this page. The title of the novel means counting who I am. It is a drama novel in the genre of romance.

Ennai Yaar Endru Enni Novel

‘Enai Yar endrenni’ is one of famous RC novels. RC has a separate fan-base of women who they are likes to read family novels. We have given many free kindle version links on our website so please check it out and subscribe us for future updates.

Name of Book :Enai Yarendrenni
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Fiction / Tamil Novel
Pages                      :119 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :4.2
Book Details

Description of Novel

‘அம்மா, இன்றைய விழாவில் செல்வா அணிய வேண்டிய வைர செட்டை, அப்பாவின் இரும்புப் பெட் டியில் இருந்து எடுத்து வைத்து விட்டீர்களா? அப்பா கடையில் இருந்தே மண்டபத்துக்கு வந்து விடுவதால், அப்புறம் எடுக்க வழியிராது. அதைத்தான், அவள் அணிய வேண்டும் என்று அப்பா கண்டிப்பாகச் சொல்லி யிருப்பதால் இப்போதே…” என்று கையோடு கொண்டு செல்லும் பெட்டியில் வைக்க வேண்டிய பொருட்களைச் சரி பார்த்தவாறு சொல்லிக் கொண்டே போன மகாலட்சுமி, தாயிடமிருந்து எந்தப் பதிலும் வராது போகவும், அவளைத் திரும்பிப் பார்த்தாள்.

நீர்த்திரையிட்ட கண்களால் தன்னை வெறித்து நோக் கியபடி நின்ற தாயின் முகம் அவளது தவிப்பை உணர்த்த, கையில் இருந்த பட்டுச் சேலைப் பெட்டிகளை அப் படியே வைத்துவிட்டு அன்னையிடம் சென்றாள்.

“ஷ், என்னம்மா இது? நல்ல விஷயமாக கிளம்பிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் போய் அழலாமா? செல்வா பார்த்தால் எவ்வளவு வருத்தப்படுவாள்? அவள் மனதில் ஒரு சிறு உறுத்தல்கூட இப்போது ஏற்படலாமா? போங்கள். போய், முதலில் முகத்தைக் கழுவிக்கொண்டு வாருங்கள். அழுத அடையாளமே தெரியக்கூடாது!” என்று சிறு கண்டிப்பும் கனிவும் கலந்த குரலில் கூறித் தாயார் குமுதவல்லியைக் குளியலறைப் பக்கமாகத் திருப்பி, லேசாக நகர்த்தி விட்டாள்.

ஆனால், மகளின் உந்துதலை ஏற்காமல், தன்னைப் பற்றி நகர்த்திய அவளது கையையே பற்றி “எப்படிம்மா? என்னால் எப்படி மகா, சந்தோஷமாக இருக்க முடியும்? உன்னைப் பெற்றவளும் நான்தானே? மூக்கும் முழியு மாகத் திருத்தமான அழகோடு மூத்த மகள் நீ இருக்க, இரண்டு வயசு சின்னவளுக்குக் கல்யாணம் என்றால், ஒன்றுமே நடவாதது போல, என்னால் எப்படிச் சிரிக்க முடியும்?” என்று வருத்தத்துடன் வினவினாள் குமுதவல்லி. யோசனையோடு, சில கணங்கள் பெற்றவளைப் பார்த் தாள், மகாலட்சுமி!

அன்னையிடம் சொல்லிவிடலாமா? தங்களுடைய இரு மகள்களில், இளைய மகளுக்கு முதலில் திருமணம் ஆவதையே தாங்க முடியாமல் வேதனைப்படுத்தும் இந்தத் தாய், தன் முதல் மகவு ஒரு போதுமே, திருமணம் செய்து கொள்ளப் போவது இல்லை என்பதை அறிந்தால்… வருத்தமாகத்தான் இருக் கும். ஆனால் இப்படி எப்போது, எப்போது என்று கலங்குவ தேனும் நின்றுவிடாதா?

சொல்லிவிட எண்ணி அவள் வாயைத் திறக்கும் போதே, குமுதம் மறுபடி புலம்பினாள். “பெரிய அசகாய சூரன் என்று மார் தட்டிக் கொள்கிறாரே, உன் அப்பன். உனக்கு ஒரு மாப்பிள்ளையைக் கொண்டு வரத் துப் பிருக்கிறதா? ஐ…ந்து ஆண்டுகள்! வெறும் பதினெட்டு வயது பச்சை மண்ணாக இருந்தபோது, காலில் கஞ் சியைக் கொட்டிக் கொண்ட மாதிரி, தன்னைப் போலவே ஒரு மேனாமினுக்கிக் குடும்பத்துப் பையனைப் பிடித்துக் கொண்டு வந்தாரே! இப்போது, முயன்றால் முடியாமலா போகும்? அந்தாளுக்கு வஞ்சினம் ஜாஸ்தி! அன்றைக்கு அவமானமாகிப் போயிற்று என்று ஆத்திரம்! அதனால் தான், உனக்கு சரியாக முயற்சி எடுக்கவே மாட்டேன் என்று உட்கார்ந்திருக்கிறார்?”

குற்ற உணர்ச்சியில் மகாலட்சுமியின் முகம் லேசாகக் கன்றியது. அவளுடைய தந்தை, முயற்சி செய்யாமல் இல்லை! பெரியவளுக்குச் செய்யவில்லையா என்று பிறர் கேட்பார் களே என்பதற்காகவே அவர் முயற்சி செய்யத்தான் செய்தார். இவ்வ…ளவு கொடுத்தேன் என்று பெருமை பேசுவதற்காகவே, செலவு செய்யவும் தயாராக இருந் தார்.

அதற்காகவும், அவரது அத்தனை பணத்துக்கும், அக்காவும் தங்கையும் மட்டும்தான் வாரிசு என்பதற்காக வும் பல குடும்பங்கள் பணத்தோடு பணம்’ என்று மற்றதை மறக்கத் தயாராகத்தான் இருந்தார்கள். மொட்டைக் கடிதாசியும், பப்ளிக் பூத்போன் காலுமாக, அவர்களை விரட்டி, விலகி ஓடச் செய்து கொண்டிருப்பவள் இந்த மகாலட்சுமியேதான். இதைச் சொன்னால், தாய் ஒத்துக் கொள்வது கடினம். அப்படியே ஒத்துக் கொண்டாலும் ‘ஏன்’ என்று அடுத்த கேள்வி வரும். அதற்கு அவளால் என்ன பதில் சொல்ல முடியும்?

Conclusion

We hope you will read the ‘Ennai Yaar Endru Enni’ novel and get new experience. If you want to share any review about book just comment below.

Leave a Reply